தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகப்படுவதால்  வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது .

கடந்த 14 ம் திகதி தரையிறக்கப்பட்ட எரிவாயு தகனசாலை , மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது . எவ்வாறாயினும் , குறித்த கையிருப்புக்கள் தீர்ந்த பின்னர் இதுவரை புதிய எரிவாயு சிலிண்டர்களுக்கான உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது .

அடுத்த எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய குறைந்தது இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமென லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . எவ்வாறாயினும் , வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்காக  நேற்றும் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோக நிலையங்களுக்கு முன்பாக பொது மக்கள் நீண்ட விசையில் காத்திருத்தனர் எனவும்  எமது தமிழ் FM பிராந்திய எய்தியாளர்கள் தெரிவித்தனர் .

June 17, 2022, 7:18 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X