எதிர்வரும் நாட்களில் சந்தைகளில் அரிசி , பருப்பு , சீனி . உருளைக்கிழங்கு , பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .

அத்துடன் செத்தல் மிளகாய் , கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கும் தட்டப்பாடு ஏற்படக் கூடும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது . கடந்த மே மாதம் 6 ஆம் திகதி முதல் அத்தியாவசிய பொருள் இறக்குமதியின் போது இதுவரை பயன்படுத்தப்பட்ட திறந்த கணக்கு அடிப்படையிலான முறையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது .

அந்த முறைமை நிறுத்தப்பட்டதன் மூலம் அத்தியாவசிய பொருள் இறக்குமதியின் போது டொலர் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .

June 16, 2022, 7:24 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X