அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கும், கட்டார் தொழில் அமைச்சர் Ali bin Saeed இற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் குறித்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது இலங்கையர்களுக்கான புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உடனடி வீசா செயன்முறை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை QATAR CHARITY நிறுவனம் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

QATAR CHARITY என்பது கட்டார் அரசாங்கத்தின் முக்கிய தொண்டு நிறுவனமாகும். குறித்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, 2019 ஆம் ஆண்டு அந்நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது.

தற்போது QATAR CHARITY மீதான தடையை நீக்குவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாதுகாப்பு அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

July 1, 2022, 7:26 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X