இலங்கையில் வருடாந்த வருமானம் 1.2 மில்லியன் ரூபாவை மீறும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ள ஒவ்வொரு நபரும் வருமான வரிக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு வருகின்றது.

புதிய தீர்மானத்திற்கமைய வருடாந்த வருமானம்,

1.2 – 06 மில்லியன் ரூபா: 6% வருமான வரி
05 – 10 மில்லியன் ரூபா: 12% வருமான வரி.
10 – 15 மில்லியன் ரூபா: 24% வருமான வரி
15 – 20 மில்லியன் ரூபா: 30% வருமான வரி வசூலிக்கப்படுகிறது.
மேலும், ஆண்டு வருமானம் 20 மில்லியனுக்கும் அதிகமான தனி நபர்கள் வருமானத்தில் 36 சதவீதம் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

September 7, 2022, 10:57 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X