கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிபளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணியளவில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. பளை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.

இதன் போது, சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த 3 உழவு இயந்திரங்களுடன், 03 சந்தேக நபர்கள் பொலிசாரால கைது செய்யபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

July 22, 2022, 11:54 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X