அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர்களை திருகோணமலை – துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் குடியேற முயற்சிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இவ்வாறு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 453 பேரை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் நபர்களை எக்காரணம் கொண்டும் தங்கவோ அல்லது நாட்டிற்குள் நுழையவோ அனுமதிக்காது, என்பதுடன் சட்டவிரோதமாக செல்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

June 27, 2022, 12:55 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X