நாட்டையும் மக்களையும் திவால் நிலைக்கு இட்டுச் சென்றவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்தல் அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுவை தாக்கல் செய்யும் போது, கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக இருந்ததால், அவருக்கு பதிலாக சட்டமா அதிபரின் பெயர் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அவர் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறியதால், கோட்டாபய ராஜபக்சவை தனிப்பட்ட பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே பிரியந்த ஜயவர்தன விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று அழைக்கப்பட்டபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

July 28, 2022, 12:23 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X