மக்கள் ஆணையின் பிரகாரம் ஆட்சியை ஏற்க தமது கட்சி தயாராக இருப்பதாக எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் எனவே அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும்; அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறியமை குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய அவர், எந்த தவறும் செய்யாத 22 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால் எந்தவொரு நிதியுதவியும் அவர்கள் வழங்கப் போவதில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர்களின் இயலாமை நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை அவர்களுக்கு எதிராக இன்று முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

June 20, 2022, 7:57 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X