ரி20 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து அணியின் இரண்டு பலம் வாய்ந்த வீரர்கள் இந்தப் போட்டியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மற்றும் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் டேவிட் மலான் ஆகிய இருவருமே இவ்வாறு நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில நாட்களாக மார்க் வுட் பயிற்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியின் போது மலானுக்கு காயம் ஏற்பட்டது.

அவர்களுக்கு பதிலாக இன்றைய போட்டியில் கிறிஸ் ஜோர்டன் மற்றும் பில் சால்ட் இணைவார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

November 10, 2022, 12:45 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X