இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நேற்று இடம்பெற்றுள்ளது.

போட்டியின் நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து சகல ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து 226 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி சகல ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது .

இதன்படி அயர்லாந்து அணியை இந்திய அணி 4 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

June 29, 2022, 7:36 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X