நாட்டில் தினமும் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டை தொடர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளாhர்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை தேசிய கட்டமைப்புடன் இணைக்கும் வரை மின்வெட்டு நேரம் குறைக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கனரக எரிபொருள் எண்ணெய் மற்றும் உலை எண்ணெய் தொகுதிக்காக 34 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடந்த 21 ஆம் திகதி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியொன்று பராமரிப்பு பணிகளுக்காக கடந்த வாரம் தேசிய மின் கட்டமைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

June 23, 2022, 7:20 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X