இன்றைய தினமும் சந்தைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இயலாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது . 7 நாட்களாக கெரவலப்பிட்டிய கடற்பிராந்தியத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கு , கட்டணம் செலுத்தப்பட்ட போதிலும் கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது . இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் நாளாந்தம் சந்தைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களின் அளவை கூற முடியாதுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது . எனினும் பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று நுவரெலியாவில் லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

June 15, 2022, 12:10 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X