இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 வரையிலான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு குறைவான மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

June 20, 2022, 7:55 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X