வெட் வரி என அழைக்கப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக இன்று முதல் உயர்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போதே அவர், வெட் வரியை அதிகரிப்பது குறித்த யோசனையை முன்மொழிந்திருந்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பை தொடர்ந்தே வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது வழக்கமாகும்

எனினும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

September 1, 2022, 9:02 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X