இன்று முதல் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது . கடந்த 7 நாட்களாக  கெரவலப்பிட்டிய – தல்தியாவுத்த கடலில்  நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கு  கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது .

கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த குறித்த கப்பலுக்கு 3.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது . தாமதக் கட்டணமாக சுமார் 2 கோடி ரூபா பணமும் செலுத்தப்பட்டுள்ளது இதற்கமைய , இன்று முதல் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது .

June 15, 2022, 7:22 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X