தனியார் பஸ்களுக்கு, இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போக்களில் உரிய முறையில் எரிபொருளை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதால், இன்று முதல் 50 சதவீத தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாடுபூராகவும் 10ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்பாக்கள் ஊடாக தினமும் 8 இலட்சம் லீற்றர் எரிபொருளை தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு வழங்க எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளதால், இந்த தீர்மானத்தை எடுத்ததாக தனியார பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வாரத்துக்குள் 70 சதவீத தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

June 20, 2022, 7:50 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X