இரண்டு டீசல் கப்பல்கள் இம்மாதம் 8 – 9 மற்றும் 11 – 14 ஆகிய திகதிகளுக்கு இடையில் நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஏற்றுமதிக்காக 19.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ,மேலும் 19.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இம்மாதம் 8ஆம் திகதிக்குள் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு 7ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலுக்கு அரசாங்கம் லங்கா IOC நிறுவனத்திற்கு 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாகவும் 40ஆயிரம் மொற்றிக் தொன் ஒட்டோ டீசலுக்கு 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முற்;பணம் செலுத்தப்பட்டதாகவும், அமைச்சர் கூறியுள்ளார்.

அதேபோன்று எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வரவிருக்கும் டீசலுக்காக ,லங்கா ஐழுஊ நிறுவனம் 50 சதவீத முற்;பணத்தை நாளை கோரியுள்ளதுடன் மீதிப் பணம் நாளை மறுதினம் செலுத்தப்படுமெனவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஜூலை 22 – 23க்குள் நாட்டிற்கு பெட்ரோல் கிடைக்கப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மலேசிய நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதி குறித்த எரிபொருளை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றைய சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 50ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 10ஆயிரம் மெட்ரிக் தொன் மண்ணெண்ணை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அவர்; கூறியுள்ளார்.

மேலும் எரிபொருள் தேவைப்படும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் எரிபொருளுக்கான கட்டணங்களை டொலர்களில் செலுத்தி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

July 4, 2022, 8:06 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X