போதைப்பொருள் வர்த்தகத்தின் பலமான உறுப்பினராக கருதப்படும் குடு ரஜின என்ற குடு பட்டி, (40 வயதுடைய பெண்னையும்) அவருடன் தொடர்புடைய மற்றுமொரு 24 வயது சந்தேகநபரையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இராஜகிரிய பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

52 கிராம் ஹெரோயின் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் இவர்களிடமிருந்து விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

August 31, 2022, 12:37 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X