குருணாகல் , கல்கமுவ – இஹலகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜரொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் .

குறித்த இராணுவ மேஜர் உட்பட்டவர்கள் பயணித்த மகிழுந்து , வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

சம்பவத்தின்போது வாகனத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

விபத்தில் காயமடைந்த இருவரும் கல்கமுவ மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர் .

November 18, 2022, 11:07 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X