அமைச்சர்கள் இருவர்; இன்று ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு குறித்த இருவரும் ரஷ்யா பயணிக்கவுள்ளதோடு, இந்த பயணத்தின் போது எரிபொருள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக இலங்கைக்கு சாதகமான பதிலொன்றை எதிர்பார்ப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் தற்போது காணப்படும் எரிபொருள் வரிசையை குறைப்பதற்காக இராணுவத்தின் உதவியுடன் இன்று முதல் டோக்கன் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, டோக்கன் விநியோகிக்கப்படும் போது அவர்களின் கைபேசி இலக்கங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

இதனூடாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைத்ததும் டோக்கன் முறைமையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு எரிபொருள் வழங்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கையில் சமீபத்திய எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான கணக்கீடுகளைக் காட்டும் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கான நேற்றைய புதிய விலை திருத்தத்திற்கு பின்னரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 334.39 ரூபா இழப்பு ஏற்படுவதாகவும், ஒட்டோ டீசல் ஊடாக 8.52 ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலில் 15.57 ரூபா இலாபமும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஊடாக 68.61 ரூபா மற்றும் சுப்பர் டீசலில் 20.27 ரூபா இலாபமும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

June 27, 2022, 7:11 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X