வாகன இலக்கத் தகட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் எரிபொருள்  விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்‌ஷ இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த நடவடிக்கையின் போது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, வாகன இலக்கத் தகட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இறுதி இலக்கமான 3, 4 மற்றும் 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு மாத்திரம் இன்று எரிபொருள் விநியோகிக்கப்படுமென எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்

July 21, 2022, 11:06 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X