பொருளாதார நெருக்கடிக்கு இலங்கைக்கு கொரிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங் தெரிவித்துள்ளார் .

தென் கொரிய தூதுவர் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார் . இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் தூதுவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி தற்போதைய நிலைமையை சமாளிக்க தென்கொரிய அரசாங்கத்தினால் மேலதிக உதவிகள் கிடைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் .

மேலும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்புகளை அதிகரிக்குமாறும் , தொழில்துறையில் முதலீடு செய்வதற்கு தொழில்முயற்சியாளர்களை அழைக்குமாறும் தென்கொரியாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துளார்

June 17, 2022, 7:47 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X