இலங்கைக்கு எதிர்வரும் 10ஆம் மற்றும் 15ஆம் திகதிகளுக்குள் வரவிருந்த பெற்றோல் தாங்கிய கப்பல்கள், தமது வருகையை உறுதிப்படுத்தவில்லை என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கப்பல், வரவில்லையெனில், எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் ஐழுஊ நிறுவனத்தின் கப்பல்கள் மூலம் மாத்திரமே பெற்றோலை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோலை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள நாணயக்கடிதம் விநியோகிக்கப்பட்டபோதும், வங்கி தரமிறக்கல் காரணமாக குறித்த கப்பலை வரவழைக்க முடியவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, மலேசியாவின் நிறுவனம் ஒன்று எதிர்வரும் 13ஆம் திகதியன்று பெற்றோலை இலங்கைக்கு எடுத்து வர இணக்கம் வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த பெற்றோல் வழமையான விலையை அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்படவுள்ளது.

எனவே அதிக விலைக்கு இந்த பெற்றோலை கொள்வனவு செய்வதா? அல்லது 22ஆம் திகதி ஐழுஊ நிறுவனத்தின் கப்பல் வரும் வரை பெற்றோல் இல்லாமல் இருப்பதா என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும் என கஞ்சன விஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கப்பலின் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக மத்திய வங்கி, டொலர் ஒதுக்கீட்டை செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

July 7, 2022, 9:03 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X