எதிர்வரும் ஆகஸ்டில் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்படவிருந்த பணியாளர் மட்ட உடன்படிக்கை பின்தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைதியான போராட்டங்கள், வன்முறையாக மாறியமையே இந்த தாமத்துக்கான காரணம் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்கள் காரணமாக, கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் செய்யவிருந்த உலக உணவு திட்டத்தின் தலைவர், தனது பயணத்தை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.

மேலும், இலங்கையர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில்வாய்ப்புக்கள் கிடைக்காமல் போயுள்ளன. அந்த வாய்ப்பு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

எனவே இன்று இலங்கைக்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் சமாதானமுமே தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அரசியலமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து எதிர்வரும் புதன்கிழமை அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படும்.

அத்துடன் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.

July 25, 2022, 8:02 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X