சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமையளிக்கப்படும் என சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று   டோக்கியோவில் சந்திக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இதேவேளை சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதை வரவேற்ற சிங்கப்பூர் பிரதமர் இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் ஜனாதிபதி ரணில் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

September 27, 2022, 11:16 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X