இலங்கையில் தற்போது 96 இலட்சம் மக்கள் வறுமையில் வாடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2019 ஆம் ஆண்டில், சுமார் 30 இலட்சம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை இந்த மாதத்தின் தரவுகளுக்கடைய 96 இலட்சமாக அதிகரித்துள்ளது என்றார்.

இலங்கையில் தற்போது 42 வீதமான மக்கள் வறுமையில் வாடுவதாக தமது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கையின் வறுமை வீதம் சுமார் 26% எனத் தெரியவந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X