சர்வதேச ஒத்துழைப்புக்கான ரஷ்ய சங்கத்தின் பணிப்பாளர் சபையின் பிரதித் தலைவர் பொலோஸ்கோவ் விளாடிமிர் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ரஷ்ய தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவுகளை எடுத்துரைத்தார்.

இரு தரப்பினரும் இலங்கையில் நடைபெறக்கூடிய பாரிய அளவிலான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதுடன், கைத்தொழில், துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினர்.

அமைச்சர் ரமேஷ் பத்திரன, மொஸ்கோவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனித லியனகே, மொஸ்கோவில் உள்ள பல முன்னணி அபிவிருத்தி நிறுவனங்களின் பணிப்பாளர் சபையின் தலைவர் ரோஷ்கோவ் பீட்டர் மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

November 11, 2022, 9:56 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X