முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அவர் இன்று  மாலை 05:20 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து விமானம் மூலம் டுபாய்க்குச் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி மக்கள் எழுச்சி காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தபோது, ​​விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் குடிவரவுத் திணைக்களத்தினரின் எதிர்ப்பு காரணமாக அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

அதனையடுத்து, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கையடுத்து, பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.

இதன்படி, பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.

September 9, 2022, 4:59 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X