அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 40 % அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இலங்கை அணி இரண்டு ஓவர்கள் பின்தங்கியிருந்ததனால் இவ்வாறு ஐசிசி போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்ல அபராதம் விதித்துள்ளார் .

வீரர்களுக்கான ஐசிசி நடத்தை விதியின் பிரிவு 2.22 இன் படி , சரியான நேரத்தில் வழங்கத் தவறிய ஒவ்வொரு ஓவருக்கும் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 20 % அபராதம் விதிக்கப்படும் . இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் , அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை ( ஐசிசி ) அறிவித்துள்ளது

June 11, 2022, 8:36 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X