இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

குறித்த விடயத்தை இலங்கை போக்குவரத்து சபை வட பிராந்திய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

இன்று முதல் இடம்பெறவுள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு பாடசாலை மாணவர்கள், அரச அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

வடமாகாணத்திலுள்ள ஏழு டிப்போவில் உள்ள ஊழியர்களும் டிப்போவிற்கு கடமைக்கு செல்வதற்கே பெற்றோல் கிடையாது என்றும் பெற்றோலை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதெவேளை இன்று முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
புதிய கட்டணமாக குறைந்தபட்ச விலை 35மூ முதல் 40மூ வரை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளளார்.

அதன்படி, புதிய திருத்தத்தின் மூலம் தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

இன்று நண்பகல் 12 மணிக்குள் பஸ் கட்டணத்தை திருத்தியமைக்காவிட்டால் எதிர்காலத்தில் பஸ் போக்குவரத்து சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மாணித்துள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

 

 

June 27, 2022, 7:12 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X