இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ள இந்தப்Nபுhட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றிப்பெற்று ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், மூன்றாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இண்டு வாரங்களுக்கு விளையாடமாட்டார் எனவும், எனவே எஞ்சியுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அவர் விலகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

June 19, 2022, 8:47 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X