2022 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் செலவீனம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கத்தின் செலவு ரூ.2,796.44 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கத்தின் செலவீனம் 3,275.8 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்துக்கான ஒதுக்கீடு 13.4 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அதிகளவான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வசம் உள்ள அமைச்சுக்கு கிட்டத்தட்ட 734 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதியமைச்சுக்கு 467 பில்லியன் ரூபா, பாதுகாப்பு அமைச்சுக்கு 376 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி கல்வி அமைச்சுக்கு 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு 248 பில்லியன் ரூபா மற்றும் வர்த்தக அமைச்சுக்கு 93 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போக்குவரத்து அமைச்சுக்கு 371 பில்லியன் ரூபா, விவசாய அமைச்சு 138 பில்லியன் ரூபா மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு 27 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

August 10, 2022, 12:18 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X