அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல பாடசாலைகளினதும்  கற்றல் செயற்பாடுகளை இன்று முதல் வழமையான முறையில் முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, வாரத்தின் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

போக்குவரத்து பிரச்சினை காணப்படும் பகுதிகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக பொருத்தமான போக்குவரத்து வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக சகல மாகாண அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

#TamilFMOfficial | #News24

August 15, 2022, 7:53 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X