உக்ரைனுக்கு ஆதரவு வழங்கி துணை நிற்போம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரால், உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும் என இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷிய படைகளின் தீவிர போரானது 100 நாட்களை கடந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் போரில் ரஷியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன.

போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ரஷியாவில் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேரில் சந்தித்துப் பேசினர்.

இதன்போது, உக்ரைன் போரின் நிலைமை குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைன் ராணுவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் பெரிய அளவிலான பயிற்சியை இங்கிலாந்து வழங்கவுள்ளதாகவும், உக்ரைனுடன் துணை நிற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரஷியா போர் தொடுத்த பிறகு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டாவது முறையாக உக்ரைன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

June 19, 2022, 8:43 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X