உணவு பாதுகாப்பு தொடர்பான குழு நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

July 1, 2022, 7:16 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X