உலகின் வயதான பெண்மணி காலமானார்

00
Oldest Lady1

உலகின் மிக வயதான பெண்மணியென கருதப்பட்ட சுசன்னாஹ் முஷாட் ஜோன்ஸ் இன்று காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

116 வயதுடைய முஷாட் ஜோன்ஸ் அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் உயிரிழந்துள்ளார்.

19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பெண்மணி எனக் கூறப்படும் இவர் இரண்டு உலகப் போர் காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்.

அத்துடன் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியில் வாழ்ந்துள்ளமையும் சுட்டிக்காட்டத் தக்கது.

SusannahMushattJones1
விவசாய குடும்பத்தில் 11 குழந்தைகளில் ஒருவராக 1899 ஆம் ஆண்டு முஷாட் ஜோன்ஸ் பிறந்தார்.

ஆபிரிக்க-அமெரிக்க இளம் பெண்களுக்கு செவிலித்தாயாக நிவ்யோர்க்கில் பணியாற்றினார்.
அந்த மருத்துவ இல்லத்திலேயே தனது 106 வயது வரை சேவையாற்றி வந்தார்.

தீய பழக்கங்கள் எதுவுமின்றி முறையான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து தேவையான உடற்பயிற்சியுடன் வாழ்ந்தமையே தனது நீண்ட கால வாழ்தலின் இரகசியம் என இவர் கடந்த வருடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 thoughts on “உலகின் வயதான பெண்மணி காலமானார்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us