உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் தற்போது 17 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள நிதி உதவிகளை வழங்குவதற்காக திட்டங்கள் மீள் கட்டமைப்பு செய்யப்படுவதாக உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர் உலக வங்கி தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை விளக்கிய ஜனாதிபதி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உலக வங்கி கடன் உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

விவசாயம், கால்நடைகள், சிறு, மத்திய மற்றும் நடுத்தர கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகளுக்காக பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குறைந்த வட்டி வீதத்தில் குறித்த கடன் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்..

June 30, 2022, 7:11 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X