ஊடகங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த, ஏனைய பணிகளுக்காக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது கைவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய போக்குவரத்து, சுகாதாரம், விமான சேவைகள், புகையிரதம், துறைமுகம், முப்படையினர் உள்ளிட்ட சில தரப்பினரே அத்தியாவசிய சேவைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வைத்தியசாலைகளுக்கு தேவையான எரிபொருள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நாட்டு மக்களுக்கு தகவலறியும் உரிமையை உறுதி செய்து வரும் ஊடகத்துறை, இந்த அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை.

இந்நிலையில் ஊடக நிறுவனங்களில் மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு மாத்திரம் தேவையான டீசலை விநியோகிப்பது குறித்து, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் ஆகிய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக வெகுச ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.

June 29, 2022, 7:29 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X