ஊட்டச்சத்து குறைபாடுடைய நாடுகளில் இலங்கை உலகில் ஐந்தாவது இடத்தையும் பிராந்திய ரீதியாக இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக ஏழை மக்கள் ஒரு வேளை உணவையோ, இரண்டு வேளை உணவையோ புறக்கணித்து வருவதாகத் தெரிவித்த அவர், இந்த போசாக்குக் குறைபாட்டிலிருந்து எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

சுகாதார அமைச்சின் வரவு/செலவுத் திட்ட தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே காவிந்த எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

X