காலி முகத்திடல் போராட்ட களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் அனைத்தும் இன்று அகற்றப்பட்டுள்ளன.

பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் மைதானத்தை விட்டு முழுமையாக வெளியேறப் போவதாக அறிவித்த நிலையில் குறித்த கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

August 12, 2022, 1:53 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X