இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இரண்டு எரிபொருள் கப்பல்களுக்கான பகுதியளவிலான கொடுப்பனவுகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, அவை எதிர்வரும் 10 நாட்களுக்குள் இலங்கைக்கு வரவுள்ளன.

31,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றி வரும் இரண்டு கப்பல்களில் ஒன்று இந்த வார இறுதிக்குள் நாட்டுக்கு வந்து சேரும் என்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றி வரும் மற்றைய கப்பல் அடுத்த 10 நாட்களுக்குள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது என்றும் பெற்ரோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே. பத்திரன இரண்டு கப்பல்களுக்கும் தவணை முறையில் பணம் செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார் .

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தகவல்களின்படி, இலங்கையில் நாளாந்தம் 3,000 மெ.தொன் பெற்றோல் மற்றும் 4,000 மெ.தொன் டீசல் பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது .

August 8, 2022, 10:24 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X