போராட்டக்காரர்களினால், காலி முகத்திடலில் உள்ள கட்டடங்களுக்கு 6 மில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை துறைமுக அதிகார சபையினால் மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகள், இருக்கைகள், சுவர்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் ஆய்வு விஜயத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பழுதடைந்த கடைகளை விற்பனையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னர், அவற்றை புனரமைப்பதற்கான செலவை இலங்கை துறைமுக அதிகாரசபை ஏற்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

September 15, 2022, 3:41 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X