டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 3 வாரங்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று நங்கூரமிடப்பட்டுள்ள போதிலும், இதுவரை அந்த கப்பலுக்கான கட்டணம் செலுத்துவதற்கான இயலுமை இல்லை.

அதனை தவிர மேலும் 2 டீசல் கப்பல்களும் ஒரு வாரத்திற்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர்; கப்பல்களுக்கான கட்டணங்களை செலுத்துவதற்குரிய டொலரை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

September 14, 2022, 12:21 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X