எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களைக் கோரியுள்ளார் . கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார் .

எதிர்வரும் சில நாட்களுக்கு வீதியை இடைமறித்து எந்தவொரு இடத்திலேனும் குழப்பநிலையை ஏற்படுத்தினால் ,அதாவது எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களைத் தாக்கினால் . அன்றைய தினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார் . சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின்மூலம் , தற்போது நாளொன்றுக்கு 350 மெற்றிக் தொன் லீற்றர் பெற்றோல் உற்பத்தி செய்யப்படுவதாகவும் எரிபொருள் சுத்திகரிப்பின் மூலம் நாளொன்றுக்கு 600 மெற்றிக் தொன் டீசல் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை வழங்குவதற்காக புதிய இரண்டு சர்வதேச நிறுவனங்கள் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கூறியுள்ளார்

June 17, 2022, 8:04 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X