விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினருக்கும் அங்கிருந்த பொது மக்கள் சிலருக்கும் இடையில் ஏறபட்ட கருத்து முரண்பாடு காரணமாக அங்கு முறுகல நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது இராணுவத்தினரால் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

June 19, 2022, 8:33 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X