எரிபொருள் வரிசையில் ஒன்றரை நாளாக காத்திருந்த நபரொருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் எரிபொருள் வரிசையில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் வீட்டுக்கு வருகைத்தந்து, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தலைக்கவசமொன்றிற்கு தீ மூட்டி, அதனை எரிபொருள் நிலையத்தை நோக்கி வீசிய சம்பவமொன்று கந்தானையில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளும், எரிபொருள் நிலைய ஊழியர்களும் விரைந்து செயற்பட்டு தலைக்கவசத்தில் இருந்த தீயை அணைத்துள்ளனர்.

இதனால், அங்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்ததன் பின்னர், மக்களுக்கு விநியோகிக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

 

June 22, 2022, 9:37 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X