நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . தாய்லாத்தின் சியாம் நிறுவனத்திடமிருந்து எரிவாயு கொள்வளவை நிறுத்தி , இதற்கு முன்னர் இலங்கைக்கு எரிவாயு விநியோகித்த ஓமான் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவினை கொள்வளவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .இதன்காரணமாகவே சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது .

சியாம் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதை விடவும் ஓமான் நிறுவனத்திடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்யும் போது ஒரு மெற்றிக் தொன்னிற்கு 34 டொலரை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகின்றது . இதனால் , உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது . எரிவாயு ஓமான் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு ஆரம்பிக்கப்படுமாயின் , எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை மேலும் ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்படும் என கூறப்படுகின்றது .

இதேவேளை , சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2 ஆயிரத்து 500 ரூபாய் நட்டத்திலேயே தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது

June 16, 2022, 7:20 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X