ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, கொழும்பு 15, புளூமண்டல் வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான குறித்த பெண், மாதம்பிட்டிய வீதி-கிம்புலா எல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடமிருந்து 52 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

September 30, 2022, 11:00 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X