சுமார் ஒரு மாத காலப்பகுதியில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில் அதிகளவான மரணங்கள் களனி பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன.

நேற்று முன்தினம் இரவு பேலியகொடை புகையிரத நிலைய வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவானது. இதன்போது, முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் தமது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில்; பயணித்துக் கொண்டிருந்த போது; இரண்டு பேரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸ் அத்தனாயக்க என்ற பெயரில் அழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

June 28, 2022, 7:22 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X