உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்பவுள்ள ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள குறைந்த வருமான பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு நெற்செய்கைக்காக 50 கிலோ யூரியா உர மூட்டைகளை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இதன்படி ஒரு ஏக்கருக்கும் குறைவான நெல் வயல்களை வைத்திருக்கும் 375,000 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு 50 கிலோ வீதம் இலவசமாக இந்த உரம் வழங்கப்பவுள்ளது.

August 27, 2022, 11:14 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X